×

மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்பட கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு: 69வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசி விவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். மேலும், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணி பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்கு தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பது தான் அந்த விருதுகளை காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது.

The post மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்பட கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து appeared first on Dinakaran.

Tags : National ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...